2009ஆம் ஆண்டில் ரிவிர செய்தித்தாளின் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட 6 இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
இதனை தமக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் இன்று கம்பஹா நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஏற்கனவே மேஜர் பிரபாத் புலத்வத்த, உட்பட்ட 6 பேர் மீது இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் பின்னர் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையிலேயே அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படாது என்று சட்டமா அதி;பர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் வழக்கின் தீர்ப்புக்காக குறித்த 6 பிரதிவாதிகளும் ஆகஸ்ட் 23இல் மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
கருத்து தெரிவிக்க