ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் விசேடக் கூட்டமொன்று நேற்றிரவு (07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சுதந்திரக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன களமிறங்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக நிற்பதாக சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க