சிறந்த பொருளாதார நிபுணர், டொக்டர் (செல்வி) துஷ்னி வீரகோன் , இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக 2019 ஜூலை 29 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டொக்டர் துஷ்னி வீரகோன் இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் (ஐ.பி.எஸ்) நிர்வாக இயக்குநராகவும், அதன் பொருளாதார கொள்கை ஆராய்ச்சிகளின் தலைவராகவும் உள்ளார்.
1994 ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் ஐ.பி.எஸ்ஸில் சேர்ந்தார், மேலும் பொருளாதாரக் கொள்கை, பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச பொருளாதாரம் குறித்து பரவலாக புத்தகங்களை வெளியிட்டுள்ளார் என மத்திய வங்கி நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க