உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

குடும்பத்துக்காக மஹிந்தவிடம் சரணடையும் மைத்திரி?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுவுடன் கூட்டணி அமைத்து பொது சின்னத்தின்கீழ் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு சுதந்திரக்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டியுள்ளார் என அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

புதிய அரசியல் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடமாட்டார் என்றும், மஹிந்தவால் களமிறக்கப்படும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மகளின் அரசியல் எதிர்காலம், சகோதரர்களின் வியாபாரம் உட்பட குடும்பம் சார்ந்த சில விடயங்களை கருத்திற்கொண்டே ஜனாதிபதி இவ்வாறு முடிவெடுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என கோரி சுதந்திரக்கட்சி மகஜரொன்றை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்து தெரிவிக்க