குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷாஃபி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு செப்டம்பர் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொல்லபப்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்றைய விசாரணையின்போது, மனுதாரருக்காக ஆஜரான ஜனாதிபதியின் ஆலோசகரான சட்டத்தரணி பைஸ் முஸ்தபா தனது தரப்பினரின் மனுவைத் திருத்தி மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், நீதிபதிகள் சிசிரா டி அப்ரூ, பிரசன்னா ஜெயவர்தன, மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிபதி குழு, சமர்பிக்கப்படும் திருத்தப்பட்ட மனு அடுத்த விசாரணையின் போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது.
பெண்களுக்கு கருத்தடை செய்தமை, சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தமை மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மே மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியர் ஷாபி கடந்த மாதம் பிற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கருத்து தெரிவிக்க