இலங்கையின் முன்னாள் போராளி என்று கூறப்படும் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அவர் இந்த மாத இறுதியில் இருந்து சிறையில் அடைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
40வயதான இவர், தமது நண்பரான மொஹமட் மன்சூர் என்பவரை கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2017ஆம் ஆண்டு பென்பீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்றது.
விசாரணைகள் இடம்பெற்று வந்தநிலையில் நேற்று அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை அறிவித்தது.
மன்சூர் தமது கட்சிக்காரரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணையுமாறு பலவந்தப்படுத்திய நிலையில் ஏற்பட்ட இந்த கொலை நிகழ்ந்ததாக பிரதிவாதியின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனினும் இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தநிலையில் அவர் இந்த மாத இறுதியில் இருந்து சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் பிரதிவாதியான முன்னாள் போராளி தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க