பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் கடவுச்சீட்டை பெற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே உதவினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
அமரிக்கா குடியுரிமையை ரத்துச்செய்துக்கொண்ட கோட்டாபய, அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்காமலேயே இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் விசாரணைகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ரணில் விக்கிரமசிங்கவே, உள்துறை அமைச்சர் வஜிர அபேயவர்த்தனவின் ஊடாக இந்த கடவுச்சீட்டை பெற உதவிசெய்தார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை அமரிக்க குடியுரிமையை கோட்டாபய ரத்துச்செய்துக்கொள்ளவும் அமரிக்க அரசாங்கத்துக்கு ரணில்; பரிந்துரை செய்திருந்ததாக மற்றும் ஒரு தகவல் கூறுகிறது.
கருத்து தெரிவிக்க