தேயிலை மீள் உற்பத்தி செய்வதற்கான திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை மீள் உற்பத்தி மேற்கொள்ளப்படாமையினால் தேயிலை தொழில்துறை தொடர்ந்தும் ஸ்திரமான நிலையில் இருப்பதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேயிலை மீள் உற்பத்தி திட்டத்தின் கீழ் புதிதாக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை மீள் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக தேயிலை அபிவிருத்தி நிதியத்திலிருந்து 50 கோடி ரூபா பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகவும் உற்பத்தியாளர்களுக்கு தரமான தேயிலைக் கன்றுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க