உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கொழும்பு வெள்ளவத்தையில் மோதல். காரணம் தெரியவில்லை

கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் 6 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் 3 பேர் காவல்துறையினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலை தடுக்க சென்ற போது காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

கருத்து தெரிவிக்க