ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று (05) மாலை அல்லது நாளை காலை (06) நடைபெறவுள்ளது.
புதிய அரசியல் கூட்டணி தொடர்பிலும், ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைக்கும் முயற்சி இழுபறியில் இருந்துவருகின்றது. அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்திலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இருவருக்குமிடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.
கருத்து தெரிவிக்க