சினிமா

முதன் முறையாக ஜீவா மற்றும் அருள்நிதி இணையும் ‘களத்தில் சந்திப்போம்’

முதன் முறையாக நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியாகியிட்டுள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ‘மாப்பிள்ளை சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் யுவன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கபடி போட்டியை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க