முப்பது வருட யுத்தத்தால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகத்திற்கு சர்வதேச தலையீட்டுடன் கூடிய தீர்வுகள் வேண்டுமென வலியுறுத்தி நேற்று மாலை மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தவும், வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியமர்த்தவும், அவசரகாலச் சட்டத்தை நீக்கு உட்பட பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்கார்கள் தாங்கியிருந்தனர்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்பாட்டப் பேரணி பிரதான வீதிவழியாக வந்து 1990.8.03ம் திகதி விடுதலைப் புலிகளால் படுகொலை நடாத்தப்பட்ட மீரா ஜூம்ஆ பள்ளிவாயலை வந்தடைந்தது.
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர் உட்பட பிரதிநிதிகள் ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் நகரசபை உறுப்பினர்கள் உட்’ப பலரும் பேரணயில் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க