வவுனியா மாவட்டத்தில் காணி இல்லாத 4900 பேருக்கு விரைவாக காணிகளை வழங்குமாறு மாவட்ட ஒருங்கினைப்புகுழுவில் தீர்மானிக்கபட்டது.
வவுனியா மாவட்டஅபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தில் காணி இல்லாதவர்கள் தொடர்பாக கலந்துரையாடபட்டது. வவுனியா பிரதேச்செயலகபிரிவில் நான்காயிரம் பேருக்கு காணி இல்லை எனவும், செட்டிகுளம் பிரதேச்செயலக பிரிவில் தொழாயிரம் பேருக்கு காணி இல்லை எனவும் பிரதேசசெயலர்களால் ஒருங்கினைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
வனவளதிணைக்களத்தின் கீழே உள்ள காணிகளை விடுவித்து காணிகச்சேரி மூலமாக காணியற்ற இவர்களுக்கு வழங்குமாறும் குறித்த செயற்பாட்டை விரைவாக செய்யுமாறு இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிசாட் பதியூதின் பிரதேச்செயலாளர்களிற்கும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களிற்கும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க