ஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொரு விதமான வாசங்களும், மருத்துவ குணங்களும் அடங்கி உள்ளது. மலர்களில் இருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெய் வாசனைத் திரவியங்களாக பயன்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் செவ்வந்திப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் காயவைத்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும். அத்துடன் உடல் மெலிந்து சோர்வாக இருப்பவர்கள் இதனை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
செவ்வந்திப் பூவை அவித்து அதன் நீரை பனங் கட்டியுடன் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு, உடற் சூடும் தணியும்.
இந்த பூவின் இதழ்களை அவித்து, சுளுக்கு, வீக்கம் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க இரண்டும் குணமாகும்.
செவ்வந்தி பூவை அவித்து அதன் நீரை பனங் கட்டியுடன் குடிநீராக அருந்தி வந்தால் காய்ச்சல், சிறுநீரக பிரச்சினைகள் என்பவற்றுக்கு நல்லது.
கருத்து தெரிவிக்க