உள்நாட்டு செய்திகள்புதியவை

7 பில்லியன் பெறுமதியான இந்திய வீட்டுத் திட்டம் கையளிப்பு

இந்தியாவின் டாடா ஹவுசிங் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ள ரூ .7 பில்லியன் மதிப்புள்ள ‘மெட்ரோ ஹோம்ஸ்’ வீட்டுத் திட்டம் இன்று (ஓகஸ்ட் 1) பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 114 வர்த்தக நிலையங்களுடன் 626 வீட்டுவசதித் தொகுதிகள்அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான பாரிய முதலீடு இலங்கையின் பொருளாதாரம் குறித்த இந்திய நிறுவனங்களின் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கட்டிடத்தை திறந்து வைத்த, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, தெரிவித்தார்.

விரைவான நகரமயமாக்கலுக்கு உட்பட்டு வரும் இந்தியாவிலும் இலங்கையிலும் அணைத்து வசதிகளையும் உள்ளடக்கிய நிலையான ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை சமீபத்திய ஆண்டுகளில் அபிவிருத்தி திட்டத்தில் பங்கெடுத்தமைக்காக இந்திய அரசுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க