உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் மாவட்ட பிரச்சினைகளை ஆராய விசேட கூட்டம்

மன்னார் மாவட்ட காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் ஆராய கொழும்பில் உயர் மட்ட கூட்டம் ஒன்ரை ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள வகை செய்வதாக அவர் உறுதியளித்தார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (௦1) காலை இடம் பெற்ற போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இவ்வாறு தெரிவித்தார்.

குள நீர்ப்பாசனத்தின் கீழான காணிகளின் அத்துமீறல்கள் குறித்தும் விவசாயிகளின் முறைப்பாடுகள் குறித்தும் சார்ல்ஸ் நிர்மலநாதன் எம் சுட்டிக் காட்டினார்

இந்நிலையில் அமைச்சர் ரிஷாத், மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச சபைத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்க ஆலோசனையை வழங்கினார் .

இதை அபிவிருத்தி குழு அதனை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அத்துடன் இது தொடர்பான முறைப்பாட்டார் இந்த குழுவுக்கு இரண்டு வார காலத்துக்குள் தமது பிரச்சினைகளை எழுத்து மூலம் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது .

அத்துடன் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மனதில் கொண்டு அதிகாரிகள் அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டுமெனவும் பொது மக்கள் தினங்களில் வரிசைகளில் நின்று தமது காரியங்களை அவர்கள் நிறைவேற்றி கொள்வதை தவிர்த்து, பிரத்தியேகமான தினம் ஒன்றை ஒதுக்கி கொடுப்பது சிறப்பானது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க