கிளிநொச்சி மாவட்டத்தில் 141 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித் பட்டதாரிகளில் 40 பேர் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வொன்றில் பெற்றுக்கொண்ட நிலையில், இன்று 101 பட்டதாரிகளிற்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது,
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி தொழில் பயிற்கி வளாக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
கருத்து தெரிவிக்க