மீன்பிடி படகுகளுக்கு வானிலை எச்சரிக்கைகள் விடுக்க புதிய வழிமுறையை அறிமுகப்படுத்த மீன்வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது .
இந்த மாத இறுதியில் இந்த எச்சரிக்கை திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி துறைமுகம் வழியே கடற்கரையை அடையமுடியாத படகுகளின் உரிமையாளர்களுக்கு பதிவு செய்யப்பட்ட அழைப்பு சேவை அல்லது எஸ்எம்எஸ் மூலம் வானிலை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் திலீப் வேதராச்சி தெரிவித்தார்.
கடல் கொந்தளிப்பில் போது தனிநபர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாக இந்த வழிமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது என அவர் விளக்கினார்.
இதற்கிடையில், நீர் ஜெட் உரிமையாளர்கள், திமிங்கலத்தைப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் படகுகள் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பிற கப்பல்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தடவுள்ளது.
இந்த சேவையை வழங்குவதற்காக இந்த உரிமையாளர்களின் அனைத்து தொலைபேசி எண்களின் தரவுத்தளத்தையும் மீன்வளத்துறை அமைச்சு தொகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க