‘ஜனநாயக தேசிய முன்னணி’ உடனான கூட்டணி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி) செயற்குழு இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை என்று அமைச்சர் அஜித் பெரேரா இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி அமைப்பதில் பல பிழைகள் இருந்தன என செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மன்னபெரும சுட்டிக்காட்டினார்.
கூட்டணிக்கான திருத்தம் தொடர்பில் குழு உறுப்பினர்கள் தங்கள் ஆலோசனைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.
அதன்படி, ஓகஸ்ட் 5 ம் திகதி கூட்டணி அமைக்க திட்டமிட்டபடி செயற்குழுவின் பெரும்பான்மை உடன்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவி ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் செயற்குழு வலியுறுத்தியது.
அமைச்சர் சஜித் பிரேமதாச பொதுச் செயலாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் தவறுகளை எடுத்துக்காட்டும் வகையில் படமொன்றை வெளியிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க