அட்டாளச்சேனையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு சிசிலியா கல்லூரி மாணவி அமோனி அவிஸ்கோன் முதலிடத்தை வென்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
10 ஆண்டில் கற்கும் இம்மாணவி இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டு கழகம் சார்பாக பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அடுத்து தேசிய மட்டப் போட்டிகளிலும் தான் பிரகாசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கோல்டன் ஈகிள் விளையாட்டு கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க