ஜோதிடம்

சனி அழிக்கும் சக்தியே!-13

– தமிழகத்திலிருந்து குணா

சனியின் பிறப்பு வரலாறு பற்றியும், தந்தைக்கு தன்பார்வையில் கிரகணத்தை ஏன் உண்டாக்கினார் சனி? என்பது பற்றியும் இந்த இதழில் பார்ப்போம்.

அதை பார்ப்பதற்கு முன், அந்த காலகட்ட சூழல் பற்றி நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். சனி அவதரித்த காலத்தை ஸ்கந்த, பவிஷ்ய புராணங்கள் உட்பட பல்வேறு புராணங்கள் விரிவாக விவரித்துள்ளன.

சனியின் உதயத்துக்கும் பிறகே நாம் வசிக்கும் பிரபஞ்சத்தின் தோற்றமும், அதில் வாழும் உயிரினங்களும் படைக்கப் பட்டது! உயிரினங்களில் உயர்ந்தவனான மனிதன் தேவ – அசுர கலப்பின குணத் தைக்கொண்டே படைக்கப் பட்டான என்று புராணங்கள் கூறுகின்றன.
அப்படி தேவ – அசுர குணங்கள் கொண்ட மனிதனை ஆளுமை செய்ய, நவகிரக தோற்றங்களும் முன்னதாகவே உருவானது. எந்த செயலை செய்தாலும் அந்த செயலுக்கான பலனை.. அதாவது செய்த செயலால் ஏற்படும் நன்மை, தீமையான பலன்களை, செயலை செய்தவரே அனுபவிக்க வேண்டும்! என்ற புதிய விதி உருவாக்கப்பட்டது!

இந்த விதி திறம்பட செயல்படுவதற்கு நவகிரகங்களைக்கொண்டே சட்ட­திட்டங்கள் வரையப்பட்டன.

அதில் நீதிமான் சனியின் பங்கே பிரதானமானது! செய்த செயலின் விளைவை, அதை செய்தவரே அனுபவிக்க வேண்டும் என்ற பிரபஞ்ச கர்ம இரகசியத்தை முதன்முதலாக வெளிப்படுத்தியது சனியே என்றால் அது மிகையில்லை!

அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமான சூரிய பகவானாக இருப்பினும், குற்றம் செய்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை உலகி ற்கு வெளிப்படுத்தியது சனி பகவானே!

ஒரு தாய்க்கு அவதூறு கற்பிக் கப்பட்டால் மகன் மூலமாகவும் தண்டனை கிடைக்கும் என்று எடுத்துக்காட்டிய கதையே சனியின் கதை!
இக்கதையினை தெரிந்து கொள்வதின்மூலம் ‘ஏன் தந்தை ஸ்தானமான 9-மிடத்தில் சனியின் தாக்கம் இருப்பது நல்லதல்ல ‘ என்பதற்காக விளக்கமும் நமக்கும் எளிதில் கிடைத்து விடும் என்பதால், கதைக்குள் நுழைவோம்.!

சூரிய பகவானின் மனைவி சந்தியாதேவி என்பவளாவாள். இருவருக்கும் யமன் ( யமதர்மன் ராஜன்) யமுனா (புனிதநதி) என்ற குழந்தைகள் உண்டு.

இந்நிலையில் சந்தியாதேவி சூரியனின் அதீத வெப்பத்தினால் வெகுவாக பாதிக்கப்படுகிறாள்! சூரியனின் வெப்பத்தை, ‘தவ­வலிமையால் தன்னுடலை உஷ்ணமாக்கிக்கொள்ளுதல் மூலமே எதிர்கொள்ள முடியும்’ என்பதை தன் தந்தை வழிகாட்டுதல்படி அறிந்து சந்தியாதேவி தவமிருக்க முடிவு செய்தாள்.

ஆனால், ‘தன் குழந்தை களையும் தன் கணவனுக்கான பணிவிடைகளையும் யார் செய்வார்கள்? என்றெண்ணிய சந்தியா தேவி, ஒரு வினோதமான வழியை தேர்ந்தெடுத்தாள். தன்னுடைய நிகழுக்கு உயிர் கொடுத்து, அவளுக்கு ‘சாயா தேவி’ ( சாயா என்றால் நிழல்) பெயரிட்டு, தன் குழந்தைகளையும் தன் கணவனையும் பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டாள். பின்பு சூரியன் அறியாமல் தவமிருக்கச் சென்றார்.

சூரியனும் சாயா தேவியை தன் மனைவி சந்தியா தேவியென்று எண்ணியே வாழ்ந்துவர, அந்த வாழ்வின் சாட்சியாக பிறந்தவரே சனி பகவான்!

நிழல் ரூபமான சாய தேவிக்குபிறந்ததால் கருமை நிற முள்ளவராக சனி இருக்கவும், ‘சனி தனக்கு பிறந்தவன் தானா?’ என்றுசூரியன் சந் தேகம் கொண்டான். இந்த சந்தேகம் தொடர்பான வாக்குவாதம் எல்லைமீற,சூரியன் சாயா தேவியை தாக்க முயல, ‘தன் தாயை தாக்குவதா’ என்ற கோபத்துடன் கைக் குழந்தையான சனி தன் தந்தை யை உற்றுப்பார்க்க,சூரியன் முதல்முறையாக கிரகணத்தால் பீடிக்கப்பட்டு ஒளியிழந்தான்.

கிரகண அவதியால்சூரியன் துன்பமடைந்தாலும், ‘சனியின் பார்வைக்கு ஏன் இவ்வளவு வலிமை? என்றுசூரியன் சிவ­பெருமானிடம் முறையிட்டான்.

‘இந்த கலியுகத்தில் நடக்கும் அதர்மங்களுக்கு சனி வைத் திருக்கும் தர்மத்தின்படியே பதிலடி கிடைக்கப்போகி­றது’ என்றும், இனி தவறு செய்யும் ஒவ்வொரு பிறவியும் இவன் கொடுக்க இருக்கும் தண்டனையான ஊழ்வி­தியிலிருந்து தப்ப முடியாது’ என்றும், ‘நவகிரகங்களில் நீ ஆக்கும் சக்தியென்றால் சனி மாபெரும் அழிக்கும் சக்தியாக விளங்குவான், அதனால்தான் அவன் பார்வை வலிமை படைத்ததாக இருக்கிறது என்று இறைவனிடமிருந்து பதில் கிடைத்தது!
சனி அழிக்கும் சக்தியா என்றால்.., ஆம்! சனி அழிக்கும் சக்தியே! அவரே ஆயுள்காரன் என்பதால் நம் பிறவிக்கு முடிவு கொடுப்பது என்றாகும்! நாம் சேர்ந்து வைத்திருக்கும் தீய கர்மாக்களுக்கு முடிவு கட்டுவது என்றாகும்! நம் தவறுகளுக்கு தண்டனை கொடுத்து – அவற்றையெல்லாம் அழித்து, நம்மை ஒழுங்கு படுத்துவது என்பதாகும்.
ஆக இந்த அழிக்கும் சக்தியான சனி..ஒன்பதில் இருந்தால் நம் பரம்பரையில் முன்னோர்களால் செய்யப்பட்ட தவறுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வந்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்!
அப்படியெனில் ஒன்பதில் சனியிருந்தால் அவ்வளவுதானா என்று பதற வேண்டாம்! ஒன்பதில் உள்ள சனியால் அழிந்ததொரு ஜாதகத்தையும், ஒன்பதாமிட சனியால் உயர்ந்த உதாரண ஜாதகமொன்றையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க