உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கிராம அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் சுமித் கொடிகாரவின் அறிவிப்பு!

கிராம அதிகாரிகள் முகம் கொடுக்கும்தொழில் ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுவேண்டுமெனக் கோரிக்கை விடுத்து தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கண்டியில் நடந்த ஊடக சந்திப்பு ஒன்றிலே இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவகையில் இவ்வாறு கூறினார்-

கிராம அதிகாரிகளது சங்கங்கள் அவ் வப்போது ஆட்சியில் உள்ளவர்களிடம் தமது கோறிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.

சுமார் 55 வருடங்களாக இவ்வாறுபேச்சு வாரத்தைகள் நடந்துள்ளனஅதேபோல் தற்போதைய ஆட்சியிலும் உள்ள அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன் 13 முறை பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளோம்.

ஆனால் எவ்வித பலனும் கிடைக்க வில்லை. ஆகவே கிராம அதிகாரிகள் சார்பில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து ஒரு நடவடிக்யை ​முன்னெடுக்க தீர்மானித்தோம்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பின்வரும் நடவடிக்கையை​ முன் எடுத்துள்ளோம்​.

ஒரு நாள் சேவையில் அடிப்டையில் அதே தினம் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் பணியில் இருந்து நீக்குவது, பொதுக்கடமைகளுக்கு தமது தனிப்பட்ட தொலைபேசியைப் பயன் படுத்துவதிலிருந்து தவிர்ந்துகொள்வது முதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்னா தெரிவித்தாவது,

சிங்கள மன்னர்கள் காலம் தொட்டு இன்றுரை வெவ்வேறு பெயர்களில் கிராம அதிகாரிகள் சேவை செய்துள்ளதுடன் சுமார் 60 வருடங்களுக்கு முன் இச் சேவை முறைசார் சேவையாக மாற்றப்பட்டது.

இருந்த போதும் இது வரையும் கிராம அதிகாரிகளுக்கு சலுகைகள் அல்லது சில உரிமைளை வழங்க அனைத்து அரசாங்கங்களும் தவறியுள்ளன.

கிராம அதிகாரி சேவையை தனி சேவையாகப் பிரகடணப் படுத்தல், புதிய சம்பளத் திட்டம் ஒனறைத் தயாரித்தல், காரியாலய வாடகை, சீறுடை கொடுப்பணவு, ஆகியவற்றை அதிகரித்தல், தொலைபேசி கொடுப்பணவை மீண்டும் பெற்றுக்கொள்ளல், அலுவலகங்களை நவீனமயப்படுத்தி நவீன உபகரணங்களை பெற்றுக் கொள்ளல், அடையாள அட்டை களுக்கு அரவிடும் கட்டணத்தில் ஒரு தொகையை பெற்றுக் கொள்ளல் உட்பட பல கோறிக்கைகளை முன் வைத்து கிராம அதிகாரிகள் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடு பட உள்ளனர்.

எனவே தீர்வு கடைக்கும் வரை ஒரு நாள் சேவையில் அடையா அட்டை பெற்றுக் கொள்ளும் பணி மற்றும் தனிப்பட்ட தொலை பேசியை பயன்படுத்தி அரச பணியில் ஈடுபடுதல் என்பவற்றில் இருந்து கிராம அதிகாரிகள் விளகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக கிராம அதிகாரிகளின் ஆறு தொழிற் சங்கங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க