பல தலைமுறைகளை கண்டு உறுதியாக நிற்கின்ற ஆலமரம் சிறப்பு வாய்ந்த மரமாக கருதப்படுகின்றது. இதன் பால், இலை, விதை, கனி, மொட்டு, பூ, பட்டை, வேர், விழுது என அனைத்தும் மருத்துவ குணங்கள் அடங்கியது.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி ‘ என்பது பழமொழி. ஆலமரக் குச்சியினால் பல் தேய்த்து வந்தால், பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.
நன்றாக பழுத்த ஆலம் பழத்தை நிழலில் காயவைத்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் உறுதியுடன் இருக்கும்.
ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் , மாதவிடாய் பிரச்சனைகள் , வெள்ளைபடுதல் போன்றன குணமாகும்.
ஆலமரத்தின் பாலையும், எருக்கலையின் பாலையும் சம அளவில் கலந்து காயங்களில் பூசினால் உடனடியாக குணமடையும்.
ஆலம் விழுதின் மெல்லிய இலைகளை 6 கிராம் எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து வெண்ணெய் கலந்து பருகினால் சத்தி நின்று விடும்.
பூக்காம்புகளை அத்தி மரப் பட்டையுடன் சேர்த்து அரைத்து சம அளவு சீனியும் சேர்த்து பாலுடன் கலந்து பருக உடலின் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கருத்து தெரிவிக்க