அண்மையில் களனி ரஜ மகா விகாரையின் தலைமை பதவியினருக்கு எதிராக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்களை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க நிராகரித்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அமைச்சரின் கருத்துக்களைக் கொண்ட காணொளி ஒன்று தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மகா சங்கம் குறித்து ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விசாரிக்கும் குழுவில் குறித்த காணொளி சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
விகாரைகளில் இளம் துறவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அமைச்சர் ரஞ்சன், யூடியூப் காணொளியில் குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க