இலங்கையுடனான உத்தேச மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் எந்த நிலத்தையும் அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இலங்கை – அமெரிக்க வர்த்தக ஆலோசனை சபையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தின் பொது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள சகல வீதிகளினதும் மேற்பார்வையும், கட்டுப்பாடும் இலங்கையிடமே இருக்கும். அமெரிக்கா எந்தவொரு நிலத்தையும் சொந்தமாக்கவோ கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவோ, நிர்வகிக்கவோ போவதில்லை.
இது தொடர்பில் கவலை வெளியிடப்படுகிறது. இலங்கை அரசாங்கமும், அமெரிக்காவும் தனியார்துறையுடனும், இந்த உடன்படிக்கை மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு 48 கோடி அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் உதவ அமெரிக்கா விரும்புகிறது. இது தொடர்பானதே மிலேனியம் உடன்படிக்கை என அவர் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க