மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய மாநாடு தாமரை தடாக அரங்கில் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக முஸ்லிம் வர்ல்ட் லீக்கின் பொதுச்செயலாளர் டொக்டர் மொஹமட் பின் அப்துல்கரீம் அலிசா கலந்து கொண்டார்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை அதிகரிக்கவும் ,இலங்கை மக்கள் ஒற்றுமையுடன் வாழவும், அனைத்து வகையான தீவிரவாதத்தையும் புறக்கணிக்கும் செய்தியை உலகுக்கு தெரிவிப்பதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க