நேற்று கூடிய அமைச்சரவையில் புர்க்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்வதற்கான சட்டத்திட்டங்களை வகுப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் தலதா அத்துகோர இந்த யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார்.
இந்த யோசனை தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அதனை நாடாளுமன்றின் ஊடாக தடை செய்யும் வகையில் தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அவசரகால சட்டத்தின் கீழ் தற்போது புர்க்கா மற்றும் நிகாப் தடை செய்யப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க