இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று இரவு தீடீர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இவர் நேற்று நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பின் பின்பு அவருடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய வேலைகளை வழமை போன்று மேற்கொண்டிருக்கையிலேயே தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு தலங்கம வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல்வாதிகள் தங்களுடைய இரங்கல்களையும் தெரிவித்துள்ளனர்.
ஆறுமுகம் தொண்டமான் 1994ம் ஆண்டு தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் நுழைந்நிருந்தார். அதனைத் தொடர்ந்து 1999ம் ஆண்டிலிருந்து அக் கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது சகோதரியின் மகன் செந்தில் தொண்டமான் அக்கட்சியின் தலைவராக பதவி ஏற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கருத்து தெரிவிக்க