உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!

வவுனியா சிதம்பரபுரம் வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு 30/07/2019 (செவ்வாய்க்கிழமை) நேற்று அதிபர் இ.தமிழழகன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நிகழ்வில் கடந்த வருடத்தில் தமது திறன்களை வெளிப்படுத்திய மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர் கௌரவிப்பு, சகல பாடங்களிற்குமான சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டது.

மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,மற்றும் மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க