சினிமா

தளபதியின் ‘கத்தி’ பட ரீமேக்கில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார்

தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான படம் கத்தி; விவசாயிகளின் பிரச்சனைகளை பேசிய இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம் . இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் அதனை பொலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவிருப்பதாகவும், ஜெகன் சக்தி என்பர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திலும் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி விஜய்யின் வேடத்தில் நடிக்க அக்ஷய் குமார் தளபதியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, இளைய தளபதி விஜய் மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘துப்பாக்கி’ யின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும்   ஹிந்தியில் ‘ஹாலிடே’ என்ற பெயரில் படம் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க