சினிமா

தமிழக கலைஞர்களுக்கான “கலைமாமணி” விருது எட்டு வருடங்களின் பின்னர் இவ்வருடம்!

கலைமாமணி விருது இந்தியாவின் தமிழக அரசினால் ஆண்டுதோறும் திரைப்படங்கள், நாடகங்கள், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

இந்த விருது தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தினால் 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது  8 ஆண்டுகளுக்கும் பின்னர் 8 ஆண்டுகளுக்குமான விருதுகள் பற்றிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடத்துக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 13ம் திகதி நடைபெறும் என தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்2014ம் ஆண்டிற்கான தெரிவில் நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உளெளிட்டோரும்  2015 ஆம் ஆண்டில் விஜய் ஆண்டனி, யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கானா பாலா, உள்ளிட்டோரும் , 2016 ம் ஆண்டிற்கு சசி குமார் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, உள்ளிட்டோரும்  அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2017ம் ஆண்டிற்கான தெரிவில் விஜய் சேதுபதி, சிங்கமுத்து, பிரியாமணி, யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்டோருக்கும், 2018 ம் ஆண்டிற்கு  ஸ்ரீகாந்த், சந்தானம், ஏ.எம்.ரத்னம், ரவி வர்மன், உன்னி மேனன் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க