தகவல் உரிமைச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கப்பால் பிரஜைகளின் சட்ட உரிமையையும் வழங்குவதாக சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரலிங்கம் சந்திரகுமார் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை [30.07.2019] இன்று தகவல் அறியும் உரிமையும் அதனை அமுல்படுத்தலும் தொடர்பில் திருகோணமலை நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலையத்தினால் எஹெட் -கரித்தாஸ் நிலையத்தில் இந்த விழிப்புணர்வுச் செயலமர்வு இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் திருகோணமலை சிவில் சமூக பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அத்துடன் இளைஞர் யுவதிகளும் பங்குபற்றினர்.
செயலமர்வில் வளவாளர் தொடர்ந்து விழப்புணர்வூட்டும்போது,
பிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள், வரப்பிரசாதங்கள், பொறுப்புடமைகள் மற்றும் நிலைப்பாடுகளை அறிந்து தமக்கான அபிவிருத்தி திட்டங்களில் தமது பங்களிப்பினையும் வழங்கக்கூடிய வகையில் தகவல் உரிமைச் சட்டமானது ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
மேலும் இச்சட்டத்தில் பொது நலன் மேலோங்கி காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும் இதனை உள்வாங்கி செயற்பட்டு பயன் அடைய வேண்டும்” என்றார்.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டம்: அடிப்படை மனித உரிமைகளின் பாதுகாப்பு தன்மை, ஜனநாயகம், நல்லாட்சி திறன்மிக்கதாக செயற்படுத்துதலும் விருத்தி செய்தலும், அரச நிருவாக இயந்திரத்தின் வெளிப்படைத் தன்மை அதனுடன் பொறுப்புடைமையினை சான்றுப்படுத்தல், உரையாடல் பங்களிப்புடனான அபிவிருத்தியினை மேற்கொள்ளல், பிரசைகளுக்கு நிருவாகத்தினுள் தொடர்புபடவும் அரச நடவடிக்கைகள் சவால்களுக்கு உட்படுத்தும் உரிமையினை வழங்கலும், தாம் இழக்கின்ற வரப்பிரதாசங்களையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் இச்செயலமர்வில் எடுத்தாளப்பட்டன.
கருத்து தெரிவிக்க