உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மரணதண்டனைக்கு 90 வீத மக்கள் ஆதரவு : ஜனாதிபதி

மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்துவது தமது தனிப்பட்ட முயற்சி இல்லையென்றும் 90 சதவீத பொதுமக்கள் இதற்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இன்று (ஜூலை 29) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக மீண்டும் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல உரிமைக் குழுக்கள், ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக, பிராந்திய அமைப்புகளுடன், மரண தண்டனை மீதான தடையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.

சமீபத்தில், மரண தண்டனையை ஒழிக்க முன்மொழியும்  தனியார் பிரேரணை ஒன்றும் பாராளுமன்றத்தில் முன் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க