உள்நாட்டு செய்திகள்புதியவை

செப்பு தொழிற்சலை பணியாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பாளர்களில் ஒருவருக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியருக்கு ஆகஸ்ட் 5 வரை மேலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (ஜூலை 29) விதித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா, என்ற சந்தேகநபர் மேலும் 9 தொழிலாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.

ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இன்றைய விசாரணையின் போது சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் அவருக்கு விளக்கமறியல் நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க