நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு ஓகஸ்ட் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரூ .75 மில்லியன் மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோத வழிமுறைகள் மூலம் பெற்றுள்ளதாகக் கூறி இலஞ்ச ஊழல் ஆணையம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிடப்பட்ட சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கணினி அமைப்புகள் தொடர்பில் விசாரிக்க அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச அமைச்சராக இருந்த காலத்தில் 2009 முதல் 2014 டிசம்பர் 31, வரை குறித்த சொத்துக்களை குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது சம்பளத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் சொத்துக்களை குவித்திருக்க முடியாது என லஞ்ச ஊழல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
வீரவன்ச மீது லஞ்சம் சார்ந்த சட்டத்தை மீறியதற்காக 39 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க