யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச பொது ஐன பெரமுன உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ் வந்துள்ள நாமல் ராஐபக்ச தலைமையிலான பொதுஐன பெரமுன குழுவினர் மதஸ்தங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட பொதுஐன பெரமுன தலைமை அலுவலகத்தில் பொதுஐன பெரமுன உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இச் சந்திப்பில் நாமல் ராஐபக்ச மற்றும் அக்கட்சியின் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க