உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கட்டாகாலியாக கால்நடைகளை விடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பிரதான வீதிகளிலும், உள்வீதிகளிலும், கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டத்தால் இரவில் பிரயாணம் செய்யும் வாகனங்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.

இரவில் வாகனங்களில் பிரயாணம் செய்வோர் இவ்வாறான கட்டாக்காலி கால்நடைகளில் மோதுண்டு பல விபத்துக்களைச் சந்திப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், களுவாஞ்சிகுடி பொலிசார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை,உள்ளிட்ட பலரும் இணைந்து இவ்வாறான கட்டாககாலி மாடுகளை பிடித்து உரியவர்களிடமிருந்து தண்டப்பணம் அவறிடுவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் திங்கட்கிழமை (29) இன்றுதெரிவித்தார்.

தற்போது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும் சிலர் தமது கால்நடைகளை கட்டாகாலியாக தொடர்ந்து விடுவததனால் அவர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய உத்தேசிதுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க