உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவின் பிறகே மெகா கூட்டணி- வேலுகுமார்!

ஜனாதிபதி வேட்பாளர் யார் எனத் தீர்மானித்த பின்பே ஐக்கிய தேசியக்கட்சியின் பங்காளிகள் இணைந்து ஒரு மெகா கூட்டணி உருவாக்கப்படும் என கண்டி மாவட்டப்பாராளுமன்ற அங்கத்தவர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

(28.7.2019) தெல்தோட்டையில் ‘ஹரிதபூமி’ (பசுமைக்காணி உறுதி) காணி உறுதிகள் வழங்கும் வைபவத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது-

மத்திய மலைநாட்டில் இருந்து தேசிய அரசியல் தலைமை ஒன்று உருவா வேண்டும். அதற்கு தகுதியானவர் எமது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல என்பது புலனாகிறது.

ஏனெனில் 2015ம் ஆண்டு நாம் ஏற்படுத்திய 100 நாள் ஆட்சியின்போது தமிழ் முற்போக்கு முன்னணனிக்கு வழங்கப்பட்ட ஒரு உறுதி மொழிதான் தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி வழங்குவது என்பது.

அதனை சாதனையில் காட்டியவர் அன்றைய பெருந்தோட்ட அமைச்ரும் இன்றைய அரச முதலீட்டு கண்டி அபிவிருத்தி மேல் நாட்டு மரபுரிமை அமைச்சர் லக்கஸ்மன் கிரியெல்லவாகும்.

எனவே அவர் தேசிய தலைவராக வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

10 சதுர அடி அறைகளை 7 பார்ச்ஸ் காணியாக்கும் பணியை எம்மால் மறக்க முடியாது. இதற்கு இந்திய அரசு உதவ முன்வந்துள்ளது.

2020ம் ஆண்டு இந்தி கட்டித்தர உள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 2500 வீடுகளை கண்டிமாவட்டத்திற்குப் பெற்றுத் தருவார்.

பலவகையிலும் மலையக சமூகத்தின் பாரிய காணிப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தந்த ஒரு விடிவெள்ளியான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளார்.

பலம் உள்ளபோதுதான் தட்டிக்கேட்கலாம். எனவே தட்டிக் கேட்பதற்கான பலத்தை எதிர் காலத்திலும் எமக்கு தாருங்கள் எனக்கேட்கிறேன் என்று மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க