உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

முடிவடையும் தருவாயில் இருந்த கதிர்காமர் கொலை வழக்கில் திருப்பம்!

இலங்கையின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படும் ஒருவர் தொடர்பில் அவரின் பெயரை மற்றும் விபரங்களை வெளியிட ஜேர்மனி அரசாங்கம் வெளியிட மறுத்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் குறித்த சந்தேக நபரின் மேலதிக விபரங்களை கோரி ஜேர்மனிக்கு விடுத்த கோரிக்கைக்கு அந்த மறுப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.

குறித்த சந்தேக நபரின் பெயர் நவநீதன் ஜி என்ற அடைமொழிக்குள்ளேயே வழங்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் அவருடைய முழுப் பெயரையும் ஜேர்மன் அரசாங்கம் வழங்க மறுத்து இருக்கின்றது.

ஏற்கனவே இந்த வழக்கு முடியும் அளவிற்கு வந்து இருக்கின்ற நிலையில், கொலை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் அண்மையில் சிறைச்சாலையில் உயிரிழந்ததை அடுத்து வேறு எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் லக்ஷ்மன் கதிர்காமர் வழக்கு முடிவடையும் தருவாயில் இருந்தது.

தற்போது ஜேர்மனியில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

குறித்த வழக்கு தொடர்பில் அண்மையில் சிறைச்சாலையில் இருந்தவரான சகாதேவன் இறந்த நிலையில் அதே போல ஏற்கனவே ஆரோக்கியநாதன் என்ற ஒரு சந்தேக நபர் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

எனவே தற்போது லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு தொடர்பில் எந்த சந்தேகநபர்களும் உயிருடன் இல்லை என்ற அடிப்படையிலேயே அந்த வழக்கு முடிவடையும் தருவாயில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
.

கருத்து தெரிவிக்க