அழகு / ஆரோக்கியம்

இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்

இஞ்சி சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.  இதனை முற்காலத்தில்  பல ஆண்டுகளாக மருத்துவத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இஞ்சி சாற்றினால் பலவகையான நோய்கள் குணமாகும்.

காலையில் ஏற்படும் தலைச்சுற்றல், சோர்வு , தாகம் சத்தி முதலியவற்றை குணப்படுத்தும்.

காலையில் இஞ்சி சாறு அருந்துவதால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் ஆரோக்கியமாக இருக்கும். தசை வலிகளையும் குறைக்கும்.

இஞ்சி சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செமிபாட்டுப் பிரச்சினைகளை சீராக்கும். அத்துடன் தேவையற்ற கொழுப்பையும் அகற்றும்.

மேலும் முடி வளர்ச்சி, வயதான தோற்றம் போன்றவற்றுக்கு நல்ல தீர்வு. தொண்டை வலிக்கும் இஞ்சிச் சாறு சிறந்தது.

 

கருத்து தெரிவிக்க