உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

‘பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழர்கள் மீது அக்கறையில்லை’

பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறையில்லாமல் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (27)இடம்பெற்ற களுவாஞ்சிகுடி சக்தி இல்ல வீதிக்கு புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் அரசியல் யாப்பு தொடர்பில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா மூலம் நாடாளுமன்றத்திலே ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவரப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, உட்பட்ட பிரதான கட்சிகள் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் எவ்வாறான மனப்பாங்கைக் கொண்டிருக்கின்றார்கள், என அறியவே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு செயற்பட்டு வருகின்றது.

இந்த முயற்சியில் தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்தந்திரக் கட்சியும், உதவ வேண்டும்.

ஆனால் சுயநல கட்சி இலாபத்தில் செயற்படுகின்ற சிங்கள அரசியல் கட்சிகள் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள்.

இச்சந்தர்ப்பமானது சிங்கள தலைமைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்பதைக் காட்டிநிற்கின்றது என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க