இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் முதன்மை பிரதி உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான பணியகத்தின் முதன்மை பிரதி உதவி செயலாளராக அவர் பொறுப்பேற்றார்.
அமெரிக்க தூதுவராக தனது 25 ஆண்டு செயற்பட்டுள்ள கேஷப் இந்தியா, மொராக்கோ மற்றும் கினியா ஆகிய நாடுகளுக்கான வெளியுறவு துறை பதவிகளிலும், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் தெற்காசியாவின் பிரதி உதவி செயலாளராகவும், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமெரிக்காவின் மூத்த அதிகாரியாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் மற்றும் பணியகத்தில் அலுவலக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
கருத்து தெரிவிக்க