மயிலிட்டி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்வதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
30 வருடங்கள் இடம்பெயா்ந்து அழிவுகளை இப்பிரதேச மக்களின் கடற்றொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான பல நாள் மீன்பிடி கலங்கள் உள்ளிட்ட உபகரணங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடா்பாக மயிலிட்டி கடற்றொழிலாளா் சங்கத்தின் உப தலைவா் எஸ்.வினோத் குமாா் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,
மயிலிட்டி துறைமுகம் சுமாா் 150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
வெளிமாவட்டங்களை சோ்ந்த பலநாள் மீன்பிடி படகுகளும் தாித்து நின்று செல்லகூடிய நீலைமை உருவாகியுள்ளது.
எவ்வாறாயினும் இது குறித்து எமது மக்களிடம் பல சந்தேகங்கள் இருக்கின்றன.
மயிலிட்டி மக்களுக்கு சொந்தமானதாக இருக்கவேண்டும். என மயிலிட்டி மக்கள் விரும்புகிறாா்கள்.
இவ்வாறான ஒரு நிலையில் எமது மீனவா்களுக்கும் கடற்றொழிலுக்கான உபகரங்கள், பலநாள் கலங்களை வழங்கி எமது மீனவா்களுக்கு உதவவேண்டும். மேலும் மக்களுடைய நிலங்கள் பூரணமாக விடுவிக்கப்படவேண்டும்.
எனவே மயிட்டி துறைமுகத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் எமது மீனவா்களுக்கு தேவையான இடம் ஒதுக்கப்படவேண்டும்.
மேலும் எமது மீனவா்களுக்கு மானிய அடிப்படையிலாவது பலநாள் கலங்கள் வழங்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.
இதேவேளை மயிலிட்டி துறைமுகத்தில் ஒரு கட்டத்தில் இலங்கையின் மொத்த தேசிய கடலுணவு உற்பத்தியில் 3ல் ஒரு பங்கை உற்பத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.
கருத்து தெரிவிக்க