முல்லைத்தீவு மாவட்டத்தில் நெற் செய்கை இடம்பெறும் போதும் வேறு இடங்களில் இருந்து வருகின்ற அரிசியினையே பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தமது பகுதியில் அரைக்கும் ஆலை இயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கான அனைத்து சாதக தன்மைகளும் இருந்தும் இவற்றை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் இந்த விடயங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
துணுக்காய் வெள்ளாங்குளம் வீதியின் ஓரமாக பல மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட அரைக்கும் ஆலை ஒன்று பல ஆண்டுகாலமாக திறக்கப்படாது அழிவடைந்து செல்கின்றது.
இந்த அரைக்கும் ஆலையை உரிய முறையில் திறந்து இதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அறுவடை செய்யப்படுகின்றன நெல்லை அரிசியாக்கி உள்ளூரிலேயே விற்பனை செய்ய முடியும்.
எனவே குறித்த ஆலையை மிக விரைவாக இயங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க