தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தோல் சோர்வடைதல், என்பன பலரை பாதித்து கவலையடையச் செய்கிறது. இது வயதான தோற்றத்திற்கான காரணம் மட்டும் அல்ல. தவறான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் போன்றவற்றையும் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் மன அழுத்தம் காரணமாகவும் தோலில் சுருக்கங்கள் ஏற்படும். வயதான தோற்றத்தை இயற்கை வழியிலேயே தவிர்க்கலாம்.
அளவுக்கு அதிகமான இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். இது உடலில் உள்ள நீரினை வற்றச் செய்து விடும். எனவே இனிப்பு வகைகளை குறைத்தால் சருமம் பளபளக்கும்.
உங்கள் உடல் வறட்சி அடையாமல் இருக்க தினமும் 2 லீற்றர் தண்ணீர் அருந்த வேண்டும்.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள், புரதம் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். தோல் சுருக்கம், தோலில் ஏற்படும் சேதங்கள் போன்றவற்றை தவிர்க்க கடல் உணவு, முட்டையையும், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் உட்கொள்ள வேண்டும்.
நல்ல உறக்கம் தேகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, தோல் சுருக்கங்களையும் தடுக்கும். மேலும் இயற்கையான அழகு சாதனங்களை பயன்படுத்தினால் இளமையை பாதுகாக்கலாம்.
கருத்து தெரிவிக்க