முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் எமக்கு ஒரு விரிவான மாற்றம் தேவை, ”என்று முஸ்லிம் மகளிர் உரிமை அமைப்பின் ஆர்வலர் எர்மிசா தேகல் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மகளிர் உரிமை அமைப்பு நேற்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
“முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாத சிறியளவிலான மாற்றங்களை நாங்கள் விரும்பவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சில மாற்றங்களைத் தடுக்கும் முயற்சிகள் குறித்து முஸ்லிம் மகளிர் உரிமைக் அமைப்புகள் “தீவிர அக்கறை” செலுத்துகின்றன.
நாட்டில் சிறுவர் திருமணங்களை அனுமதிக்கும் சட்டத்தில் உள்ள விதிகளை மேற்கோள் காட்டி சீர்திருத்தங்களுக்காக அக்கறை செலுத்தும் ஆர்வலர்களுடன் மேற்படி அமைப்பு சமீபகாலமாக பரவலாக விவாதித்து வந்துள்ளது.
கருத்து தெரிவிக்க