ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஆகஸ்ட் 11 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
இதற்கு முன்னரே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது என்றும், புதிய அரசியல் கூட்டணி உட்பட மேலும் பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.
இந்த சந்திப்பையடுத்தே தமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முடிவெடுக்கவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
கருத்து தெரிவிக்க