உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘சட்டங்கள் வழியே சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுகின்றனர்’

சட்டம், ஒழுங்குமுறை மற்றும் ஜனநாயகத்திற்கான மக்களின் விருப்பத்தை நிராகரிக்க வேண்டாம் என ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், க்ளெமென்ட் நைலெட்சோசி வோல் நாட்டு தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான நிலை குறிப்பாக எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பில் மதிப்பிடும் ஐ .நாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு விசேட விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று விசேட ஊடக அறிக்கை வெளியானது.

குறித்த அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘அமைதியாக ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகிய இரண்டிற்குமான உரிமைகளை நாட்டின் அரசியலமைப்பு பாதுகாக்கிறது.

ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் உள்ளது.

எவ்வாறாயினும், இது சிறுபான்மையினரை குறிவைக்க பயன்படுத்தப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போதல், நில உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் வளங்களை அணுகல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகளை ஒழுங்கமைக்கும் நபர்களுக்கு எதிராக இந்த சட்டங்கள் பெரும்பாலும் பாரபட்சமான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது,

இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் நாட்டில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அதிகரித்து வருவது குறித்தும் சிறப்பு அறிக்கையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

பாரபட்சமான மற்றும் வன்முறை தொடர்பில் பெரும்பான்மை சமூகத்தின் உறுப்பினர்கள் தண்டிக்கப்படாமல் போகிறார்கள் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சமூக ஊடங்கள் வாயிலாக தவறான தகவல் பரப்புவதன் மூலம் வன்முறை தூண்டப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறப்பு அறிக்கையாளரின் முடிவுகளும் பரிந்துரைகளும் முன் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க