பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுமது தர்மவர்தன இன்று (ஜூலை 26) சட்டமா அதிபர் (ஏஜி) சார்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழு (பி.எஸ்.சி) முன் சாட்சியங்களை வழங்கினார்.
தெரிவுக்குழு முன் ஆஜராகுதல் தனது கடமைகளுக்கு தடையாக இருப்பதால் சாட்சியங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தப்புலா டி லிவேரா தெரிவித்த நிலையில், பிரதி சொலிசிட்டர் முன்னிலையாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகருக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததாகவும் சட்டமா அதிபர் கூறினார்.
சட்டமா அதிபரின் கோரிக்கைக்கமைய சாட்சியம் அளிக்க வேண்டியதில்லை என தெரிவுக்குழு சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கிய நிலையில் அவர் தெரிவுக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியும் இன்று தெரிவுக் குழு முன் சாட்சியங்களை வழங்கினார்.
கருத்து தெரிவிக்க