நாட்டிற்கு கழிவுகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் வணிக வர்த்தகம் குறித்த வர்த்தமானியை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே நிதியமைச்சர் ய்வாருகுறிப்பிட்டுள்ளார்.
2013 இல் வெளியிடப்பட்ட 1818/30 குறியீட்டு வர்த்தமானியை தேவை ஏற்படின் சில திருத்தங்களைச் செய்வதன் மூலம் மேலும் பலப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வர்த்தமானியில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க போதுமான ஏற்பாடுகள் உள்ளன,
அதே நேரத்தில் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை இறக்குமதி செய்வதையும் தடுக்கும் வாழ்முறைகள் உள்ளன என்று அவர் விளக்கினார்.
குறித்த வர்த்தமானியின் கீழ் அனுமதிக்கப்பட்ட அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் சுங்கக் கட்டளைச் சட்டத்திற்கு உட்பட்டவை என்றும், இதன்மூலம் எந்தவொரு சட்ட மீறலுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சுங்கத் துறைக்கு அதிகாரம் அளிப்பதாகவும் அமைச்சர் சமரவீரா மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க